சமையல் கலை என்பது அனைவருக்கும் அமுது படைக்கும் ஒரு உயர்ந்த கலை. இந்த கலை எளிதில் எல்லோருக்கும் வந்துவிடாது.
இருந்தாலும் விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால் சமையல் மட்டுமல்ல உணவுப்பண்டம் மற்றும் பலகாரம் செய்யும் முறையிலும் நாம் திறமையானவர்களாக ஜொலிக்கலாம்.
சிறந்த உணவு என்றால் சமைக்காத உணவு தான். ஆனால் பெரும்பாலும் மக்கள் சமைக்காத உணவை விரும்புவதில்லை. காரணம் ருசி போன்ற காரணங்களால் மக்கள் நாளும் ஒரு சமையல் கலையை கற்றுக்கொண்டு முயற்சித்துகொண்டே இருக்கின்றனர். சமையல் உணவில் நமக்கு திறமையை வளர்ப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று பலவகையான சமையல் எப்படி செய்ய வேண்டும் என்பதை சில நிமிடங்களில் எளிதாக படத்துடன் அறியலாம். சாதாரண லெமன் சாதம் எப்படி செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி இப்போது மிகப்பெரிய உணவு அங்காடிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் வரை அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்பதை படத்துடன் விளக்கின்றனர்.
ஒவ்வொரு வகையான உணவு வகைகளையும் Slideshow மூலம் பார்க்கலாம். வாசகர்கள் தங்கள் அனுபவத்தையும் பதிவு செய்யலாம். தங்களுக்கு பிடித்த சமையல் வகைககளுக்கு மதிப்பெண் கொடுக்கலாம். மற்றவருடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது
குணசேகரன் ## உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDelete