என்றென்றும் இளமையாக இருக்க தொடர்02

என்றென்றும் இளமையாக இருக்க தொடர்01

என்றென்றும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தையும் பணத்தையும் விரயம் செய்பவர்கள் பலர்.
கிராமங்களில்கூட பியூட்டி பார்லர்கள் பெருகி வருவதே இதற்கு சாட்சி. பணத்தை தண்ணீராய் செலவு செய்து முதுமையை மறைக்க படாதபாடு படுகின்றனர். மக்களின் மனநிலையை உணர்ந்து முதுமையை மறைக்கும் ஆரோக்கியமான வழிகள் குறித்த ஆய்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பொப்கார்னும், பாலாடைக்கட்டியும்(சீஸ்) உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று இப்போது தெரியவந்துள்ளது. சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முதுமையை மறைக்க எளிய வழிகளை பட்டியலிட்டுள்ளது.
இதில் பிரதான இடம் பெற்றிருப்பது பொப்கார்னும், சீஸும் தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடலை வயது வித்தியாசமின்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதவர்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் வயது முதிர்வும் தெரியாது.
எலும்பு மற்றும் தசைகள், கண், மூளை, இதயம் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடல் மெருகேறும். உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ அறிவுரைகள் இதற்கு உதவும்.
மேலை நாடுகளில் மிக பிரபலமாக இருந்த சீஸ் தற்போது நம் நாட்டு உணவுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது.
இதில் உள்ள அபரிமிதமான கால்சியம், எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. வயது அதிகரிக்கும் போது உடல் மட்டுமின்றி எலும்புகளும் வலுவிழக்கும். இந்த நிலையை சமாளிக்க அதிக அளவு சீஸ் எடுத்துக் கொள்ளலாம்.
சோயா உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தசைகள் வலுப் பெறும். மல்டி வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் நிறைந்த கீரைகள், சாலட் வகைகள், ஆரஞ்சுப்பழம் போன்றவை கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பெரும்பாலான சத்துகள் உள்ள பொப்கார்ன் உடலுக்கு மட்டுமின்றி இதயத்துக்கும் இதமளிக்கும்.
சால்மோன் மீன்களில் உள்ள சத்துகள் மூளைக்கு பலம் சேர்க்கும். பொதுவாக 40ஐ கடந்து விட்டவர்களின் அன்றாட உணவில் அதிக வைட்டமின்கள், நார்ச்சத்துகள், சுண்ணாம்பு, புரதம், தாதுக்கள் இடம் பெற வேண்டியது அவசியம் மட்டுமின்றி ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது ஆய்வாளர்கள் தரும் டிப்ஸ்.
தொடர்
 
Share:

Related Posts:

13 comments:

  1. படித்தேன் ரசித்தேன்

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல உபயோகமான பதிவு.நன்றி.

    ReplyDelete
  4. என்றென்றும் பதினாறாக வலம் வருவதற்குத் தேவையான பதிவு சகோ. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  5. நான் எப்பவும் இளமையாகத்தான் இருக்க விரும்புறன். நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. என் ராஜபாட்டை ராஜா @@ உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete
  7. கவி அழகன் @@உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete
  8. Rathnavel, @@@@@ உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete
  9. குணசேகரன்...உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete
  10. நிரூபன் என்றென்றும் பதினாறாக வலம் வருக எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  11. சந்ரு என்றென்றும் இளமையாக இருக்க எனது வாழ்த்துகள்

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive