இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. |
இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தை தெரிவித்தன, இலங்கைத் தமிழர்களுக்காக அந்தக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட்டுமே இருந்தது என்று 2006-ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக கான்சல் ஜெனரலாகப் பணியாற்றிய டேவிட் ஹூப்பர் கூறியுள்ளார்.
2007 நவம்பர் 20-ல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மற்றொரு தகவலில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். கட்சித் தொண்டர்களையும், காங்கிரûஸயும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள், வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக கருணாநிதி பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.
நன்றி eu
All are politics boss
ReplyDeleteAll parties in tamilnadu are DUPAKUR
ReplyDeleteபழ நெடுமாறன், வைகோ போன்றோரும் இருக்கிறார்கள் நண்பரே.
ReplyDeleteதலைவர்ர மூணு மணி நேர உண்ணாவிரதத்தை பார்த்து அப்படி சொல்லியிருப்பார்கள்
ReplyDeleteம் ...
ReplyDeleteநம்ம தலையில் மிளகாய் அரைக்கலாம் என்பது அரசியல் கட்சிகளுக்குத் தெரிந்த விடயம் தானே...
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா @ All parties in tamilnadu are DUPAKUR but all tamil peoples are not dupakur
ReplyDeleteகோவி @ (பழ நெடுமாறன், வைகோ போன்றோரும் ...)உண்மைதான் நண்பரே.
ReplyDeleteகந்தசாமி. @ (தலைவர்ர மூணு மணி நேர உண்ணாவிரதத்தை....)அப்படியும் இருக்கலாம் தொடர்ந்து அவதானித்தும் இருக்கலாம்
ReplyDeleteநண்டு @நொரண்டு -ஈரோடு @ ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி
ReplyDeleteநிரூபன் @ உண்மைதான் தொடர்ந்து அரைக்க முடியாது தமிழர் ஒன்றும் கேனையன் இல்லை
ReplyDelete