இன்றைய உலகில் கணணி உபயோகிக்காத இடமே இல்லை. நமது கணணியின் செயல்பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நிறுவி இருப்போம். இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நிறுவுவது அவசியமாகிறது.
நாம் கணணியில் வேலை செய்து கொண்டு இருப்போம். திடீரென
ஏதோ ஒரு முக்கியமான வேலையாக அல்லது ஞாபகமறதியாலோ நம் கணணியை அணைக்காமல் சென்று விடும். நம் வீட்டுக்கு போன பிறகு தான் ஞாபகம் வரும். அந்த நேரங்களில் நம் கணணியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.
அந்த சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள நேர அளவை பொருத்து உங்கள் கணணி தானாகவே Shutdown செய்யப்படும். இந்த மென்பொருள் மூலம் Automatic Restart செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த மென்பொருளில் Auto Shutdown, Auto Restart, Auto Logoff, Auto Hibernate ஆகிய வசதிகள் அடங்கி உள்ளது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
இதை செட் செய்ய Shorcuts tab க்ளிக் செய்து உங்கள் கீபோர்டில் ctrl அழுத்தி உங்களுக்கு வேண்டிய எழுத்தை அழுத்தவும். இனி நாம் நம் கணணியை அணைக்காமல் சென்றாலும் கவலை பட வேண்டியதில்லை. நம் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.
0 comments:
Post a Comment