பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் !!!!!!!!

நாம் மிகவும் சிரமப்பட்டு  பதிவை எழுதுவோம். அப்படி எழுதிய பதிவை தவறுதலாக அழித்து விடுவோம். அதை மறுபடியும் எந்த ஒரு மென்பொருட்கள் துணையும் இல்லாமல் கொண்டுவரலாம்.
இதில் இரண்டு வழிகள் உள்ளன.

1. நாம் ஏதேனும் போஸ்ட்டை delete செய்த பிறகு, நாம் அந்த

விண்டோவை மூடாமல் அல்லது அந்த டேபை மூடாமல் அதே இடத்தில் இருந்தால் நம்முடைய பிரவுசரின் Back பட்டனை அழுத்துவதன் மூலம் அதை திரும்பவும் நம் தளத்திருக்கு கொண்டுவரலாம். நீங்கள் அழித்த பதிவு வரும் வரை back பட்டனை அழுத்தி கொண்டே இருங்கள்.

2. நீங்கள் எந்த பிரவுசரில் பதிவை delete செய்தீர்களோ அந்த பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள். இதில் Ctrl+H ஒன்றாக அழுத்துங்கள் உங்களுக்கு history விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான delete செய்த பதிவை பாருங்கள்.
முக்கியமானது நீங்கள் எந்த தேதியில் delete செய்தீர்கள், எந்த நேரத்தில் delete செய்தீர்கள் என்று தெரிந்தால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.
விண்டோவில் காட்டியிருப்பதை போல தான் delete செய்த பகுதி இருக்கும். உங்கள் பதிவை கண்டுபிடித்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யவும். இது தான் நீங்கள் தேடிய பதிவு என்பதை உறுதி செய்து கொண்டு காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.
Share:

Related Posts:

4 comments:

  1. மிக அருமை. எல்லோருக்கும் பயன் படும்

    ReplyDelete
  2. அன்புடன் அருணா தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

    ReplyDelete
  3. jaleela kamal தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive