.என்றும் இளமையாக வாழ !!!!!

40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான். இவ்வாறு 40 வயதில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ உங்களது 20 வயதுகளில் நீங்கள்
என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்கள், எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.
40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைபயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். மேலும் இந்நிபுணர்கள் பல யோசனைகள் கூறியுள்ளனர் அவைகளுள் ஒன்று உடற்பயிற்சி.
ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ அல்லது இன்னும் பிற விளையாட்டோ அல்லது உடற் பயிற்சி கூடத்திலோ இவைகளுள் ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும்.மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் பல வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை. உதாரணத்திற்கு ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள் உடலினை விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது
Share:

Related Posts:

3 comments:

  1. பயனுள்ள பதிவு
    சட்டென முடித்துவிட்டது போல ஒரு
    எண்ணம்தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    ReplyDelete
  2. RAMANI @தொடரந்து எழுதுகிறேன் உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

    ReplyDelete
  3. நன்றி நண்பர் கருண் என்னை அறிமுகம் செய்தமைக்கு தங்களது பணிக்கு எனது வாழ்த்துகள்

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive