மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக சாம்சங் நிறுவன டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்க எல்ஜி நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஆப்பிள்? சான்பிரான்சிஸ்கோ: சாம்சங் கேலக்ஸி X மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2018-ம் ஆண்டில் வெளியிட சாம்சங் தயாராக வருகிறது. இதேபோல் ஆப்பிள் நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான பணிகளை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி போட்டியாளராக இருக்கும் சாம்சங் நிறுவனத்திடம் டிஸ்ப்ளேக்களை பெற்றால் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் அம்பலமாக வாய்ப்புகள் இருப்பதால் ஆப்பிள் நிறுவனம் எல்ஜி-யுடன் ஒப்பந்தமிட இருப்பதாக தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் புதிய ஐபோன்களில் பயன்படுத்துவதற்கென மடிக்கக்கூடிய OLED ஸ்கிரீன்களை எல்ஜி டிஸ்ப்ளே தயாரிக்க துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மடிக்கக்கூடிய ஐபோன் பேனல் தயாரிப்பு பணிகள் 2020-ம் ஆண்டு முதல் துவங்கும் என்றும் இதற்கான ப்ரோடோடைப் எல்ஜி நிறுவனம் ஏற்கனவே தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அந்தவகையில் எல்ஜி OLED பேனல்களின் தயாரிப்பை அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் எல்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பது குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X சாதனத்திற்கு சாம்சங் நிறுவனம் பிரத்தியேகமாக பேனல்களை விநியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

OLED தயாரிப்புகளில் சாம்சங் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் எல்ஜி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பலப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு எல்சிடி பேனல்களை வழங்குவதில் ஆப்பிள் மற்றும் எல்ஜி நிறுவனங்களிடையே நீண்ட கால ஒப்பந்தம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. டிஸ்ப்ளே பேனல்களை பொருத்த வரை 2017-ம் ஆண்டு வாக்கில் சாம்சங் நிறுவனம் 89 சதவிகித AMOLEDக்களை கொண்டிருக்கும் என UBI ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்சமயம் ஐபோன் X, சாம்சங் கேலக்ஸி S8, சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ், சாம்சங் கேலக்ஸி நோட் 8, ஒன்பிளஸ் 5, எல்ஜி V30 மற்றும் விவோ X9s உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் OLED ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன.
Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive