ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?

ஜேசு  என்பவர்  யார் ? அவர்  ஏன் இந்த  உலகத்திற்க்கு  வந்தார். 
கிறிஸ்தவம்  என்பது  வெள்ளைகாரனின்  மதமா??  ரிக் வேதத்தில்    கூறப்படும்  பிரஜாபதி கிறிஸ்துவா உங்களின்  பலவிதமான  கேள்விகளுக்கு  சாது  செல்லப்பா  பதில் தருகிறார்.,

Share:

7 comments:

  1. தனபால்28 January 2012 at 02:37

    ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி என்பவர் கிறிஸ்து என்று சாது செல்லப்பா கூறுகிறார்.கண்டிப்பாக அவர் ஆப்பசைத்த குரங்கு போல் மாட்டிக்கொண்டார்.இதைப் பற்றி அவர் விவாதிக்க முடியவே முடியாது.

    தனபால்

    பிரஜாபதி பற்றிய ஒரு சிறு தகவல்..பிரஜாபதி என்பவர் பிரம்மாவால் படைப்புக்காக உருவாக்கப்பட்டவர்.இந்த பிரஜாபதி 9 பேர்.இவர்களுக்கு மனைவி குழந்தைகள் உண்டு. நூறு பிரஜாபதி ஒரு பிரம்மாவுக்கு சமம்.

    நீங்கள் பிரஜாபதி தான் கிறிஸ்து என்று விவாதிக்க விரும்பினால் விவாதிக்க நான் தயார்.

    ReplyDelete
    Replies
    1. தனபால்4 February 2012 at 06:43

      திரு சாருஜன் அவர்களே,

      கிருஸ்தவ மத மாற்ற நிறுவனங்களின் சூழ்ச்சிகளில் ஒன்று தான் இந்த இந்து வேதங்களில் கிருஸ்த்தவத்தை நய வஞ்சகமாக நுழைத்தல்.

      இந்த பிரஜாபதி பற்றிய சூழ்ச்சி மட்டுமல்ல சிவன் ,நாராயணன், தட்சிணா மூர்த்தி போன்றோரும் ஏசுவே என்றும், திருவள்ளுவரே இயேசுவின் போதனைகளைக் கேட்டு தான் திருக்குறளை எழுதினார் என்றும், அகத்தியரே அவரது நூல்களில் ஏசுவைப் பற்றித் தான் கூறுகிறார் என்றும் இன்னும் பல சூழ்ச்சிகளை செய்திருக்கிறார்கள்.இவற்றிக்கு பதிலளிக்க முடியாமல் சில கிறிஸ்தவர்களே இந்த சூழ்சிகளை புரிந்து கொண்டுள்ளனர்.இனியும் உங்கள் (கிருஸ்தவர்க)ளின் சூழ்ச்சிகள் எடுபடாது.உங்களின் சூழ்ச்சிகள் உங்களுக்கே எதிராக மாறும் சூழ்நிலையில் தான் இப்பொழுது நீங்கள் இருக்கிறீர்கள்.உங்களின் எந்த சூழ்ச்சிகளுக்கும் உங்களால் பதிலளிக்க முடியாது.


      இந்த சாது செல்லப்பாவால் இதைப் பற்றி விவாதிக்கவே முடியாது.அவரது தளத்தில் விவாதிக்க கமெண்ட் வசதி இல்லை.உங்களால் முடிந்தால் அவரை விவாதிக்க அழையுங்கள்.உங்கள் தளத்திலேயே விவாதிக்கலாம்.

      Delete
  2. திரு தனபால் அருகளுக்கு மற்றும் திரு.சாருஜன் அவர்கறுக்கும் என்னுடைய வணக்கம் உங்களுடைய கருத்தது பரிமாற்றம் மிகவும் பயனுள்ளததாக இருந்தது. என்னை போன்ற புதிதாக கிருஸ்த்துவின் அன்பை ருசிபார்த்து அவரே மெய்யான தெய்வம் என்று கண்டுகொண்டு இயேசுவை பின்ற்றி வருகிறவர்களுக்கு இப்படிபட்ட குழப்பங்கள் சந்தேகங்களை ஏற்படுத்திவிடுகின்றன. நான் சில மாத்திற்க்கு எனது கைகளிள் ஒரு புகைப்படம் கிடைத்தது அதில் இயேசுவை காவி உடை அனிந்து உள்ளவராகவும் மற்றும் மரத்தடியில் தியானம் செய்வது போன்றும் மற்றும் புத்தரை போன்று தலையில் குடிமி வைத்தது போன்று உள்ள ஒரு புகைப்படம் கிடைத்தது. நான் என் நபரிடம் கேட்டபோது இயேசுவை இந்துகளிடம் பரப்பவுவதர்க்கு சிலர் இந்தமாதிர்யான புகைப்படங்களை வரைந்து இயேசுவும் இந்து மதத்தின் ஒரு கடவுள்தான் என்று சொல்லி மக்களை அனுகபோகிறோம் என்று சொன்னாற்கள். இந்த கடைசிகாலத்தில் சிலர் இவ்வாறாக வழிவிழகி போகின்றனர் நம் மெய்யான தெய்யவம்மாகிய இயெசு கிருஸ்த்து யாரிடம் ஒப்பிடமுடியாதவர் ********(ஏசாயா 46:5-8) 5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?

    6 பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலி பொருத்திக்கொள்ளுகிறார்கள், அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான், அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.

    7 அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதன் ஸ்தானத்திலே வைக்கிறார்கள், அங்கே அது நிற்கும், தன் இடத்தைவிட்டு அசையாது, ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை.

    8 இதை நினைத்துப் புருஷராயிருங்கள், பாதகரே, இதை மனதில் வையுங்கள்.************* **************************************************************

    இப்படியிருக்க நம் பரிசுத்த தெய்வத்தை மற்ற விக்கரகங்ளுடம் ஒப்பிடுவது எப்படி இன்றைக்கு நாமே பிள்ளையாரு உன்மை முருகன் உன்மை மாரியம்மன் சோளியம்மன் போன்ற விக்கரங்களை நாமே நம்வாய் கொண்டே சொல்லாமல் தெய்வம் என்று சொல்ல வைக்கிறான் பிசாசனவன் இயேசுக்கு நிகர் இயேசுவே நான் இந்த கானொலியில் கெட்டதில் திரு. செல்லப்பா அவர்கள் பிராஜபதியின் அடையாளங்கள் குறிப்பாக ஒருசில 10 அடையாளங்கள் இயேசுவுக்கு பொருந்துகிறது.. மற்ற எந்த தெய்வத்துக்கும் பொருந்துகிறதா என்று கேட்டுள்ளார் . அனால் ஒன்று உலக்கத்தில் எந்த வேதமானாலும் எந்த நுல்லானாலும் அவை எல்லாமே மனிதனின் சிந்தையில் உதித்தவையாக உள்ளது பரிசுத்த வேதாகமம் மட்டுமே தேவன் தந்தவையாக உள்ளது ஐயா அவர்கள் சொன்து போல மந்திரங்கள் பெரும்பாளானவை இயேசுவை குறித்தாக தான் உங்ளது .. அதை நாம் ஆறாய்ந்து தெளிவாக சொல்ல வேண்டும் இல்லை என்றால் அவருடைய நாமத்தை வீனிலே வழங்குவது போல் ஆகிவிடும் இன்றைக்கு அனேக இடங்களில் தவறான போதனைகளும் வழிமுறைகளும் சொல்லப்படுகிறது கிருஸ்த்து பற்றி தெளிவா நாம் முதழில் அறிந்து கொல்லவேண்டும்...... உங்களுடைய பனிக்காக மிகவும் நன்றி கர்த்தர் தாமே உங்களை அசீர்வதிப்பாராக ஒருவேளை திரு. தனபால் அவர்கள் இயேசு வை ஏற்றுக்கொள்ளாதவராக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் அவருக்கு நிகர் அவரே இயேசு கல்லும் அல்ல மன்னும் அல்ல மரித்து மன்னோடு மக்கிபோனவரும் அல்ல உயிர் உள்ள தேவன். உங்களையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக... நன்றி......

    ReplyDelete
    Replies
    1. திரு கரிகாலன் அவர்களே,

      பிரஜாபதியின் பத்து அடையாலங்கள் இருக்கட்டும்.பிரஜாபதியே 10 பேர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதில் மனைவி குழந்தைகள் இருக்கும் ப்ரஜபதியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பெரும்பான்மையான இந்துக்களுக்கே தெரியாது.அதனால் தான் இந்த சாது செல்லப்பா போன்றோரின் பொய் பிரச்சாரம் ஓடுகிறது.

      கர்த்தர் ஒருவரல்ல,அதற்கு மேற்ப்பட்டவர் என்பது என்பதும் அதில் ஒருவருக்கு மனைவி குழந்தைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

      இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் நானே என்று கூறிய கர்த்தரா நம்மை ஆசிர்வதிப்பார்.?

      இயேசு,தன்னிடம் உதவி கேட்டு வந்த கானானிய பெண்ணை நோக்கி சொன்னதை கவனமாகப் படித்துப் பாருங்கள்.

      காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல.மத்தேயு.15-24

      அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்-மத்தேயு 15-26
      யூதர்களின் தேவனாகிய கர்த்தர், யூதர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக இயேசுவை அனுப்பி இருக்கிறார்.

      யூதர்கள் தான் எனது பிள்ளைகள், மற்றவர்களெல்லாம் நாய்கள் என்று இயேசு கூறுகிறார்.

      இவரை ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறீர்கள்.இப்படி இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

      ---தனபால்

      Delete
    2. சகோ,கரிகாலன் @ தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி .உங்களை கத்தர் ஜேசு ஆசிர்வதிப்பாராக.உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமைந்ததிற்கு தேவனுக்கு நன்றி.தங்களது கருத்தை வாசித்ததில் புதிதாக கிருஸ்த்துவின் அன்பை ருசிபார்பவராக தெரிவில்லை .தாங்கள் கிருஸ்த்துவின் அன்பில் முதிர்ச்சி அடைந்தவர் நீங்கள் என நான் நினைக்கின்றேன்.உங்களது கருத்து மிக சரியானதே.சுவிசேசத்தை அறிவிப்பது கிறிஸ்தவனது கடமை அதை ஏற்று கொள்வது அல்லது நிராகரிப்பது தனி மனிதனுடைய உரிமை .

      Delete
    3. சகோ,சிந்திப்பவன் @ தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி .உங்களை கத்தர் ஜேசு ஆசிர்வதிப்பாராக.தங்கள் நினைப்பது போல கிறிஸ்து யூதர்களுக்கு மட்டும் தேவனாகிய கர்த்தர் அனுப்பவில்லை உலகத்தில் உள்ள அனைவருக்காகவும் கடவுள் அனுப்பினார். காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல.மத்தேயு.15-24
      இதில் இஸ்ரவேல் வீட்டார் என்பது இறைவனால் அழைக்கபட்ட நாமே அன்றி இஸ்ரவேல் என்ற வார்த்தை யூதர்களை குறிக்கவில்லை .
      அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்-மத்தேயு 15-26
      இதில் அவளின் விசுவாசத்தை சோதிக்கும் பொருட்டே இப்படி சொன்னார் பின்னர் அவள் நினைத்ததிற்கு அதிகமாக அவளிற்கு கொடுத்தார் .தங்களது வாதப்படி யூதர்களின் தேவனாகிய கர்த்தர், யூதர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக இயேசுவை அனுப்பி இருக்கிறார். என்றால் ! அவள் கேட்டதை இயேசு கொடுத்திருக்க மாட்டார் .

      Delete
  3. திரு.சாருஜன் அவர்களே,

    ///இதில் இஸ்ரவேல் வீட்டார் என்பது இறைவனால் அழைக்கபட்ட நாமே அன்றி இஸ்ரவேல் என்ற வார்த்தை யூதர்களை குறிக்கவில்லை///

    இஸ்ரவேல் வீட்டார் என்றும் இஸ்ரவேலர்கள் என்றும் பைபிளில் கூறப்படுபவர் யூதர்களே.இந்தியர்களாகிய நாம் அல்ல.இந்த அடிப்படை ஞானம் கூட பைபிள் படிக்கும் கிறிஸ்தவரான உங்களுக்கு தெரியாமல் போனது.???

    இஸ்ரவேல் வீட்டார் என்பது இந்தியரான நாமே என்று தவறாக கற்றுக்கொடுத்தது யார்.???

    ///தங்கள் நினைப்பது போல கிறிஸ்து யூதர்களுக்கு மட்டும் தேவனாகிய கர்த்தர் அனுப்பவில்லை உலகத்தில் உள்ள அனைவருக்காகவும் கடவுள் அனுப்பினார்///

    இப்படி நான் நினைக்கவில்லை. நீங்கள் சத்திய வேதம் என்று கருதும் பைபிளில் யேசுவே இவ்வாறு கூறுகிறார். சொந்த இடம் இல்லாமல் பல இடங்களில் பரவி இருந்த யூதர்களை காப்பதற்காகவே, தான் கர்த்தரால் அனுப்பபட்டதாகக் கூறுகிறார்.


    *அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.-மத்தேயு 15-*

    ///இதில் அவளின் விசுவாசத்தை சோதிக்கும் பொருட்டே இப்படி சொன்னார் பின்னர் அவள் நினைத்ததிற்கு அதிகமாக அவளிற்கு கொடுத்தார்///

    இதில் அவளின் விசுவாசத்தை சோதிக்கும் பொருட்டு இப்படி சொல்லவில்லை.இஸ்ரவேலரல்லாத, கானானிய பெண்ணாக இருந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே அவருக்கு உதவ முதலில் நாய் என்று கூறி மறுக்கிறார்.மீண்டும் மீண்டும் அவளின் கெஞ்சலுக்கு பின் தான் இயேசு உதவுகிறார்.
    இயேசு யூதர்களை பிள்ளை என்றும் மற்றவர்களை நாய் என்றே கூறுகிறார்.மூல ஹிப்ரு மொழியிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் நாய் என்றே உள்ளது.தமிழ் மொழி பெயர்ப்பில் உள்ளது போல் நாய்குட்டி அல்ல.

    மேலும் இது அந்த கானானிய பெண்ணை சோதிக்கும் பொருட்டே செய்யப்பட்டது என்று உள்ளூர் பாதிரிகள் மட்டுமே சமாளிக்கிறார்கள். பைபிளில் இதற்க்கு ஆதாரம் இல்லை.
    ///அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
    But he answered and said, It is not meet to take the children's bread, and cast it to dogs.///

    ///அவள் நினைத்ததிற்கு அதிகமாக அவளிற்கு கொடுத்தார்///

    அப்படி ஒன்றும் அவள் நினைத்ததிற்கு அதிகமாக அவளுக்கு இயேசு கொடுக்க வில்லை.பைபிளில் அதற்க்கு ஆதாரம் சிறிது கூட இல்லை.அந்த கானானிய பெண்ணுடைய மகளுக்கு பேய் பிடித்திருக்கிறது.அந்த பேயை ஒட்டுமாறு கெஞ்சுகிறாள்.அதற்குத் தான் இயேசு அவளை நாய் என்று கூறி முதலில் மறுக்கிறார்.பின் அந்தப் பெண்ணின் கெஞ்சல்களுக்குப் பின் பேயை ஓட்டுகிறார்.அவ்வளவே.அதிகமாக எதையும் செய்துவிடவில்லை.

    நம்ம கிராம கருப்பசாமி, காளியம்மன் கோவில் பூசாரி செய்யக்கூடிய உதவியைத் தான் செய்திருக்கிறார்..

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive