இரகசியத்தை வெளிட்ட டொனால்ட்ரம் !

நேற்று திங்கட்கிழமை, ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை சந்தித்திருந்தார். அதன் போது பல முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாடினார்கள். பிரான்சில் இடம்பெற்ற ஜூலை 14 நிகழ்வுகளில் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. அதன் போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு ட்ரம்பினை வெகுவாக கவர்ந்திருந்தது. 


இதுபோன்ற அணிவகுப்பை தாம் முதன்முறை பார்த்ததாக அப்போது தெரிவித்திருந்தார். அதன் பின்னர், நேற்று இடம்பெற்றிருந்த சந்திப்பில் மீண்டும் அதை நினைவு படுத்தினார் ட்ரம்ப். ஜூலை 4 ஆம் திகதி அதே போன்றதொரு அணிவகுப்பை தாம் நிகழ்த்த உள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், 'ஜூலை 14 நிகழ்வை விட சிறந்ததாக நிகழ்த்த முயற்சி செய்கிறேன்!' குறிப்பிட்டார். 

அதன் பின்னர் இருவரும் சிரித்துக்கொண்டனர். தவிர, சந்திப்பில் ஈரானிய அணு ஒப்பந்தம் குறித்தும், பரிஸ் காலநிலை ஒப்பந்தம் குறித்தும் பல முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive