வாட்ஸ்ஆப் மூலம் வரும் பிரச்சனைகளிற்கு தீர்வு

பெண்களுக்கு தற்போது வரும் பிரச்சினைகளுக்கும் ஆபத்துக்களுக்கும் காரணமாக அமைவது சமூகவளைத்தளங்களாகும். தற்போது உடனுக்கு உடன் செய்திகளை பரிமாற்றத்துக்காக பிரபல்யாமானது ஒன்றுத்தான் வாட்ஸ் ஆப் ஆகும். முகப்புத்தகத்தில் மட்டுமல்லாது வாட்ஸ்ஆப்பிலும் கூட தற்போது பெண்களுக்கு பிரச்சினை வருகின்றது.

தெரியாத நபர்கள்கூட, ஸ்டேட்டஸ் மூலம் நம்மை தொடர முடியும். தெரிந்தவர்களே தெரியாதவர்கள் கூட நமது வாட்ஸ் ஆப் கணக்கினை பார்க்க முடியும். நமது புகைப்படத்தினை பார்க்கவும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும்.

ஒரு போலி பெயருடன் ஒருவர் குறிப்பிட்ட தெலைபேசி எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று நம்மால் உறுதிபடுத்த முடியாத நிலையில், அவர் நம்முடன் தொடர்புகொண்டு, நமது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது.

தோழிகளால் 'வாட்ஸ்ஆப்’ குரூப்களில் நமது பெயர் இணைக்கப்படும்போது, அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் நமது தொலைபேசி எண் பகிரப்பட வாய்ப்புண்டு.

இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, 'வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும்.

அதாவது, பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், 'லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம்.

நாம் எங்கே இருக்கின்றோம் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்வது கூடாது.

குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

'ப்ளாக்' (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, நமக்கு தொல்லை தருபவரை நமது கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது.

ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதிலிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது.

இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான 'நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொண்டால், 'ஆபத்துதவி'யாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும்.

ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நாம் இருக்கும் இடத்தினை விபரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய் சேர்ந்துவிடும்.

இவ்வாறாக பெண்களை பாதுகாப்பாக இருப்பது நல்லது.
Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive