தள்ளாடவிடவில்லையே தாங்கியே நடத்தினீரே

ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாடவிடவில்லையே
தாங்கியே நடத்தினீரே


புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே    
இன்றும் என்றும் வல்லவரே

கண்ணீரை கண்டீரையா
கரம்பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா

எபநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா

உறுதியாய் பற்றிக்கொண்டேன்
உம்மையே நம்பியுள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே
Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive