முள்ளிவாய்காலுக்கு முந்திய கனங்கள்


முள்ளிவாய்க்காலில் நமது உறவுகளின் உயிர்கள் போராளிகளாகவும் பொதுமக்களாகவும் மகிந்தவின் மேற்பார்வையில் கொடூரமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது உலகெங்கும் இருந்து எட்டுத் திசைகளிலும் வாழும் தமிழ் மக்கள் கருணாநிதி அவர்களை நோக்கி தங்கள் கரங்களை நீட்டி தாழ்மையாக வேண்டிக்கொண்டார்கள். மன்றாடினார்கள். கூக்குரலிட்டார்கள்.
மத்திய அரசின் மனதை மாற்றும் வகையில ஏதாவது செய்து நமது மக்கள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள்” என்று. அவரது கைகளில் மேற்படி மக்கள் மன்றாடிக் கேட்டவற்றை சில நிமிடங்களுக்குள் செய்து கொடுக்கக் கூடிய சக்தி இருந்தது. அதனாற்தான் எண்திசைத் தமிழர்கள் “ஏதாவது செய்யுங்கள்” என்று கேட்டார்கள்.
ஆனால் கலைஞர் கருணாநிதியின் மனம் மாறவில்லை. அவர் மௌனமாக இருக்கையில் இலங்கையின் பக்கமிருந்து அவருக்கு “மரியாதை” அதிகமானது. தங்கள் மரியாதையை வெளிகாட்டும் வகையில் கருணாநிதியின் கைகளுக்குள் மேலும் நிதி வந்து சேர்ந்தது.

நன்றி  தமிழ் வின் 
Share:

Related Posts:

1 comment:

  1. பெயரில்லா6 March 2013 at 01:39


    டெசோ இயக்கம் என்பதே கருணாநிதி ஊரை ஏமாற்ற கொண்டுவரப்பட்ட ஒரு இயக்கம். 2009 இறுதி போரின் போது அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டார். பத்திரிக்கைகளில் ஈழ படுகொலை செய்திகள் பிரசருப்பதை நிறுத்துமாறு மிரட்டல் விடுத்தார். ஈழ ஆதரவு பொது கூட்டங்களுக்கு அனுமதி மறுத்தார். பிரபாகரன் போட்டோவை கூட பொது இடத்தில பயன் படுத்தினால் சிறையில் அடைத்தார். இந்த கருணா செய்த செயல்களை ராஜபசே கூட செய்திருக்க மாட்டார். 50000 மக்கள் கொல்லப்பட்டதை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு மழை விட்டும் தூறல் நிற்க வில்லை. அதை பற்றி பேசாதீர்கள் என்றார். ஆட்சியில் இருக்கும்போது ஈழத்தை பற்றி கேட்டல் மத்திய அரசின் நிலையே என் நிலையும் என்றார். இவருக்கு தெரியாமல் இறுதி கட்ட போர் நடக்கவில்லை என்பதே உண்மை. மே 17 2009 நாளை சிங்கள ராணுவத்திற்கு குறித்து கொடுத்ததே இந்த கருணாதான். இந்தியாவில் தேர்தல் நடக்கிறது. அதனால் அது முடியும் வரை எதுவும் செய்யாதீர்கள் என்று இவரே ஒரு நாளை குறித்து கொடுத்தார். தேர்தல் முன் மட்டும் இவ்வாறு நடந்திருந்தால் இந்நேரம் இவருடய கட்சியினர் ஒருவரும் நாடாளுமன்றத்தில் இருந்திருக்க மாட்டார்கள். இந்த துரோகதிர்க்காகதான் இவர் படு கேவலமாக சட்ட மன்ற தேர்தலில் தோற்க்கடிக்கப்பட்டார். தேர்தலில் இலவசமாகவும், பணமாகவும் வாரி இறைத்தும் படு தோல்வி அடைந்ததற்கு ஈழ பிரச்சனையும் ஒரு காரணம். இன்றைய தமிழ் இளைஞர்கள் ஈழ பிரச்னையை ஒரு கௌரவ பிரச்சனையாக பார்கிறார்கள். படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பதில் உறுதியாக இருகிறார்கள். தமிழ் நாட்டில் அணைத்து கட்சிகளும் ஈழ பிரச்னையை முன்னிலை படுத்தி போராடுகின்றன. எங்கே அவர்கள் பிரச்னையை அவர்கள் கையில் எடுத்தால் தன்னுடய குட்டும் அம்பலத்திற்கு வந்து விடுமோ என்று பயந்துதான் காங்கிரசின் அறிவுறுத்தல்படி கருணா டெசோ வை ஆரம்பித்தார். பார்பனர், ஆரியர் என்று அம்மாவை சொல்லி வந்தார். இன்று அவர்தான் இவரை விட அதிரடியாக சிங்கல்திர்க்கு எதிராக பல முடிவுகளை எடுக்கிறார். அவர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் "நான் பிரதமராக வந்தால் இலங்கை மீது போர் தொடுத்து தனி இழம் அமைப்பேன் என்றார்" ஆனால் கருணா இழ மக்களுக்காக வாயால் மட்டுமே வடை சுடுவார்.

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive