தீபாவளி செயற்கை கோள் வரைபடமும் நிரூபணம் ஆகும் வசனம் !

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தீபாவளியன்று நவீன செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தினை வெளியிட்டது. கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளியன்று ‌எடுக்கப்பட்ட படம் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாயின. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்துக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியும் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது துல்லியமாக தெரிந்தது.இவற்றை தவிர இந்தியாவை‌ ஒட்டியுள்ள பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரைபடங்களும் இவற்றின் எல்லைப்பகுதிகளும் துல்லியமாக காட்சியளித்தன.இது அண்மைய செய்தி .

 இப் படத்தின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதபட்ட வேத வசனம் உண்மை விஞ்ஞான ரீதியாக  நிரூபனம்   ஆகின்றது.  மனிதக்  கைகளால்  ஆன செயற்கை கோள்வாயிலாக    இவ்வளவு  செய்ய முடியும் போது இறைவனுக்கு ''படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.''  என்ற வசனம் உண்மை என்பது நிரூபணம் ஆகின்றது 


எபிரே. 4:12-13

சகோதர,சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீரதூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும். மும் 
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Share:

Related Posts:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive