பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்

உயிர்த்தார் கிறிஸ்து  உயிர்த்தார் இந்த உலகை  ஜெயித்து விட்டார் 
மனுகுலத்தை  மீட்ட  இறைவன் கல்லறைவிட்டு  உயிர்த்துவிட்டார்  
அலகையின் பிடியில்  இருள்  சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால்     ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு  கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு  பலர் ஏளனம்  மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய்  உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில்  உரம்  பெற  உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

Share:

Related Posts:

4 comments:

  1. அருமையா இருக்கு, கர்த்தர் நல்லவர்....அவர் கிருபை என்றுமுள்ளது.....

    ReplyDelete
  2. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

    ReplyDelete
  3. அம்பாளடியாள்@@@@@சகோதரரே தாமதத்து மன்னிக்கவும் .உங்களது மனவேதனை எதுவாக இருந்தாலும் ஒரு நண்பனிடம் கூறுவது போல ஜேசுவிடம் சொல்லிவிடவும் .கண்டிப்பாக ஏதாவது ஒருவழியில் கர்த்தர் உதவி செய்வார்.மறு நிமிடம் என்ன நடக்கும் என தெரியாத தமிழ் ஈழ யுத்த களத்தில் அற்புதமாக என்னை காப்பாற்றியவர்.

    ReplyDelete
  4. நன்றி நாஞ்சில் மனோ@@ உண்மையாகவே ..அவர் கிருபை என்றுமுள்ளது...நல்ல கருத்து என் வாழ்கையிலும் பல அற்புதங்கள் செய்துள்ளார் தங்களது கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive