டொனால்ட் ட்ரம்புக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்களுக்கு புனித நகராக ஜெருசலேம் உள்ளது.
பாலஸ்தீனம் வசம் இருந்த ஜெருசலேம் கடந்த 1967ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக உள்ள டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவேன் என கூறியிருந்தார்.
இன்றளவும் தனது நிலைப்பாட்டில் இருந்து டிரம்ப் மாறவில்லை, இதனை பிரான்ஸ் கடுமையாக கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீன் மார்க் ஐரால்ட் கூறுகையில், டொனால்ட் டிரம்ப் இந்த முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க 70 நாடுகள் முன்வந்துள்ள நிலையில், அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive