விஜய்க்கு அடிபணிந்த பா.ஜ.க


அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த ‘மெர்சல்’ பட விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டிருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு அது இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை கிண்டல் செய்யும் காட்சிகளுக்கு பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவற்றை நீக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார்.
அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் ‘மெர்சல்’ பட காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பா.ஜனதா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததால் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும் பா.ஜனதாவுக்கு எதிராகவும் அரசியல் கட்சிகள் களம் இறங்கின.
தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ் கட்சிகள், நாம் தமிழர் கட்சி, ச.ம.க. என அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளும் தமிழ் திரை உலகமும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்தன. எந்த காட்சியையும் நீக்க கூடாது என்றும் குரல் கொடுத்தனர்.
இதற்கிடையே இதுவரை சினிமா பிரச்சினைகளில் தலையிடாத காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கபில் சிபில், சசிதரூர் ஆகியோரும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர்.
இதனால் ‘மெர்சல்’ படத்தில் வரும் ஜி.எஸ்.டி. காட்சிகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய அளவில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு கிடைத்தது.
‘மெர்சல்’ பட வசனம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்யாதீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி கபில்சிபல் தனது டுவிட்டரில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா பற்றி ‘மெர்சல்’ படத்தில் கருத்துக்களை முன்வைக்க விஜய்க்கு உரிமை உண்டு. பேச்சு சுதந்திரத்துக்கு பா.ஜனதா புதிய வரையறை கொடுக்கிறது. எது சரி, எது தவறு என்பதை பா.ஜனதா தீர்மானிக்க முயற்சிக்கிறது என்று சாடியுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் தனது டுவிட்டரில், தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “காங்கிரஸ் அதை பேணி காப்பதில் உறுதியாக உள்ளது, அதிகாரத்தில்  இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுதந்திரம் தான் நமது பாதுகாப்பு” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரசை சேர்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி.க்கு எதிரான காட்சிகளை நீக்கச் சொல்வது அநீதியானது என்று கூறியுள்ளார்.
‘மெர்சல்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ராமசாமி அறிக்கை வெளியிட்டார். அதில், ‘மெர்சல்’ பட சர்ச்சை வேதனை அளிக்கிறது. இது யாருக்கும் எதிரானது அல்ல என்று பா.ஜனதா முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலமும் விளக்கம் அளித்தோம், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இனி அவர்கள் பார்வையில் எதிர்ப்பு நியாயமாக இருந்தாலும் அதற்காக சர்ச்சை காட்சிகளை நீக்க தயாராகவே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
‘மெர்சல்’ பட விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவையற்ற எதிர்ப்பை உருவாக்கியிருப்பதாக பா.ஜனதா மேலிடம் கருதுகிறது. காட்சிகளை நீக்கினால் மிரட்டல் காரணமாக நீக்கப்பட்டதாகி விடும். எனவே காட்சிகள் நீக்கம் இருக்காது என்றே தெரிய வருகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் ‘மெர்சல்’ பட தயாரிப்பு நிர்வாகி ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் ‘மெர்சல்’ படத்தில் எந்த காட்சியும் நீக்கமோ அல்லது அழிப்போ கிடையாது” என்று தெளிவுபடுத்தி உள்ளார்.
Share:
Read More

கடற்புலிகளின் தளபதி ஒருவர் உயிருடன்

கடற்புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் சூசைக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவர்களில் சீலன் முக்கியமானவர். அவர் கடற்புலிகளின் பிரதித் தளபதியாக இருந்துள்ளார்.
கடற்படைக்கு எதிரான பல தாக்குதல்களின் போது தலைமை வகித்துள்ள சீலன், கடற்படையின் வள்ளங்கள் பலவற்றை அதிரடித்தாக்குதல் மூலம் மூழ்கடிக்கவும் செய்துள்ளார்.
வன்னி யுத்தத்தின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சீலனும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
ஏனையவர்களைப் போன்று அவரைப்பற்றிய தகவல்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. கடற்படையினரால் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் சீலன் எனப்படும் லோகேஸ்வரன் உயிருடன் இருக்கும் தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள பிரதியமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு சீலன் அண்மையில் நேரில் சென்று கலந்துரையாடல் மேற்கொண்டிருப்பது குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:
Read More

சீமானின் கருத்துக்கள் மெர்சல் படத்தில்

சீமானின் கருத்துக்கள் மெர்சல் படத்தில்

Share:
Read More

பெயர் மாற்றும் சாமியார்

தமிழ் நாட்டில் பெயர் மாற்றும் மிக பிரபல சாமியார் ,பிரபல தேச பிதா,தூய இந்து h raja ji he
Share:
Read More

பெரியாரின் பொய்கள் பித்தலாட்டங்கள்


பெரியாரின் பொய்கள் பித்தலாட்டங்கள்
Share:
Read More

கேவலமான கதா பத்திரங்களினால் உருவானது இந்து மதம்


கேவலமான கதா பத்திரங்களினால் உருவானது இந்து மதம்

Share:
Read More

வடக்கு-கிழக்கு சமஷ்டி அடிப்படையில் மதச்சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும்


இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தாம் நிராகரிப்பதாக வடமாகான முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை நிராகரிக்கின்றீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது- நீண்ட காலமாக இலங்கையின் நிலப்பரப்பு யாழ்ப்பாண இராஜ்ஜியம், கண்டிய இராஜ்ஜியம், உருகுணு இராஜ்ஜியம் மற்றும் கரையோர இராஜ்ஜியம் என்று பல இராஜ்ஜியங்களாக ஆளப்பட்டுவந்தது. நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் ஆங்கிலேயர் 1833ம் ஆண்டு சகல இராஜ்ஜியங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முழு இலங்கைக்கென ஒரு தனிநிர்வாக அலகை உண்டாக்கினார்கள். இதனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருந்த மக்கள் முழு இலங்கையிலும் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டார்கள்இப்பொழுதும் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர். முழு இலங்கையையும் சுதந்திரத்தின் போது ஆங்கிலேயர் இலங்கையரிடம் கையளித்துவிட்டுச் சென்றனர். சுதந்திரத்தின் போது இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை ஏற்றுக்கொண்ட எம் அரசியல் வாதிகள் அதிகாரம் கிடைத்த உடனேயே தாம் இலங்கையர் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டனர். சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், மலேயர் என தம்மைப் பிரித்துப்பார்க்கவும் சிந்திக்கவும் தொடங்கிவிட்டார்கள். பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அவர்கள் சட்டங்களைப் பெரும்பான்மையினருக்கு ஏற்ற விதத்திலும் சிறுபான்மையினரைப் புறக்கணிக்கும் விதத்திலும் பாத்தனர். அதனால் 1949ம் ஆண்டில் மலையகத் தமிழர்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு கொண்டு வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டம் தமிழ் அரச அலுவலர்களின் உரித்துக்களைப் பறித்தெடுத்தது. தரப்படுத்தல் எம் மாணவர்களின் உயர் கல்வியில் கை வைத்தது. அரச காணிக்குடி யேற்றங்கள் தமிழர் பாரம் பரியமாக வாழ்ந்த இடங்களை பிற இடங்களில் இருந்து கொண்டு வந்த பெரும்பான்மையினர் பறித்தெடுத்து குடியிருக்க உதவின. 1970ம் ஆண்டளவில் தான் திருகோணமலையைச் சுற்றி சிங்களக் கிராமங்கள் உருவாகத் தொடங்கின. பொலிஸார் மேலான அதிகாரம் மத்தியின் கைவசம் இருந்ததால் வடகிழக்கு மாகாணங்களில் சிங்களப் பொலிஸாரின் ஆதிக்கம் கூடியது. இராணுவத்தினரும் அழைக்கப்பட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது குறிப்பிட்ட சில பௌத்த வணக்கஸ்தலங்களை விட வேறெங்கும் பௌத்த கோயில்களோ, விகாரைகளோ இருக்கவில்லை. இப்பொழுது இராணுவ அனுசரணையுடன் பௌத்த வணக்கஸ்தலங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டு வருகின்றன. பௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் அவை எழும்புகின்றன. போருக்குப் பின்னர் தான், இது ஒரு ‘சிங்கள பௌத்த நாடு’ என்ற குரல் ஆவேசமாக ஒலித்து வருகின்றது. சரித்திரம் பிழையாக எடுத்துரைக்கப்பட்டு இந்த நாடு ஒரு சிங்கள பௌத்தநாடு என்ற பொய்யான, பிழையான, தவறான கருத்தை முன்வைத்து வருகின்றார்கள். வடக்கில் எந்தக் காலத்திலுமே சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழவில்லை. தமிழ் பௌத்தர்கள் வடகிழக்கில் சிலநூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். இன்று இருக்கும் பௌத்த எச்சங்கள் அவர்களால் விடப்பட்டவையே. நாயன்மார்களின் பக்திப் பிரவாகம் மக்களை ஈர்க்கத் தொடங்கிய போது தமிழ் பௌத்தர்கள் பௌத்தத்தைக் கைவிட்டுவிட்டு முன் போல் சைவர்கள் ஆனார்கள். ஆகவே வடகிழக்கு பௌத்தத்தை வேண்டாம் என்று கைவிட்ட ஒருபிரதேசம். அங்குமீளவும் பௌத்தத்தை அதுவும் அரச உதவியுடன் திணிக்கப் பார்ப்பது வடகிழக்கு மக்களின் மனிதஉரிமைகளைப் பாதிப்பதானது. வடகிழக்கு மக்கள் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் அல்லாதவர்கள். இப்போதிருக்கும் பௌத்தர்கள் கூட அரச உள்ளீட்டால் அண்மைக் காலங்களில் உள்ளேற்கப்பட்டவர்கள். ஆகவே இலங்கையை பௌத்தநாடென்றோ சிங்களநாடென்றோ கூறுவதை நான் வலுவாக நிராகரிக்கின்றேன். இப்பொழுதும் எப்பொழுதும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்ப்பேசும் மக்களே பெரும்பான்மையினராக இருந்துவந்துள்ளனர். தென்னிந்தியாவில் பௌத்தம் வளர்ச்சியடைந்த காலத்தில் இலங்கையின் வடகிழக்கிலும் பௌத்தம் வளர்ச்சி கண்டது.
Share:
Read More

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக சாம்சங் நிறுவன டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்க எல்ஜி நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஆப்பிள்? சான்பிரான்சிஸ்கோ: சாம்சங் கேலக்ஸி X மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2018-ம் ஆண்டில் வெளியிட சாம்சங் தயாராக வருகிறது. இதேபோல் ஆப்பிள் நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான பணிகளை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி போட்டியாளராக இருக்கும் சாம்சங் நிறுவனத்திடம் டிஸ்ப்ளேக்களை பெற்றால் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் அம்பலமாக வாய்ப்புகள் இருப்பதால் ஆப்பிள் நிறுவனம் எல்ஜி-யுடன் ஒப்பந்தமிட இருப்பதாக தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் புதிய ஐபோன்களில் பயன்படுத்துவதற்கென மடிக்கக்கூடிய OLED ஸ்கிரீன்களை எல்ஜி டிஸ்ப்ளே தயாரிக்க துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மடிக்கக்கூடிய ஐபோன் பேனல் தயாரிப்பு பணிகள் 2020-ம் ஆண்டு முதல் துவங்கும் என்றும் இதற்கான ப்ரோடோடைப் எல்ஜி நிறுவனம் ஏற்கனவே தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அந்தவகையில் எல்ஜி OLED பேனல்களின் தயாரிப்பை அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் எல்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பது குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X சாதனத்திற்கு சாம்சங் நிறுவனம் பிரத்தியேகமாக பேனல்களை விநியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

OLED தயாரிப்புகளில் சாம்சங் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் எல்ஜி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பலப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு எல்சிடி பேனல்களை வழங்குவதில் ஆப்பிள் மற்றும் எல்ஜி நிறுவனங்களிடையே நீண்ட கால ஒப்பந்தம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. டிஸ்ப்ளே பேனல்களை பொருத்த வரை 2017-ம் ஆண்டு வாக்கில் சாம்சங் நிறுவனம் 89 சதவிகித AMOLEDக்களை கொண்டிருக்கும் என UBI ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்சமயம் ஐபோன் X, சாம்சங் கேலக்ஸி S8, சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ், சாம்சங் கேலக்ஸி நோட் 8, ஒன்பிளஸ் 5, எல்ஜி V30 மற்றும் விவோ X9s உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் OLED ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன.
Share:
Read More

இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி, காட்டு மிராண்டிகள் போல நடக்கும் செயல்கள்

உலகில் மிக மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பாக ஐ,எஸ் கருதப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி, அவர்கள் காட்டு மிராண்டிகள் போல நடக்கும் செயல்கள் தற்போது உலகிற்கு மெல்ல மெல்ல தெரியவர ஆரம்பித்துள்ளது. காட்டு மிராண்டிகள் கூட இவ்வாறு செய்யமாட்டார்கள் என்கிறார், இவர்களிடம் தப்பிப் பிழைத்த ஒரு பெண். தங்களை சிறு வயதிலேயே ஐ.எஸ் தீவிரவாதிகள் சிறை பிடித்ததாகவும். நூற்றுக்கணக்கான பெண்களை அவர்கள் சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எங்களை பிடித்து சுவர் ஒன்றின் ஓரமாக நிறுத்தி மேலாடைகளை தூக்கி மார்பங்கள் இருக்கா என்று பார்ப்பார்கள்.

மார்பகம் இருக்கும் பெண்களை பிடித்து அவர்களை வேறு ஆண்கள் கற்பழிக்க என அனுப்பிவிடுவார்கள். இன்னும் மார்பகம் வராத பெண்களை மீண்டும் 3 மாத சிறைக்குள் அடைத்து விடுவார்கள் என்று தப்பி வந்த பெண் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இவ்வளவு காட்டு மிராண்டியாக இவர்கள் இருப்பார்கள் என்று தான் நினைக்கவே இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு தனி தேசம் ஒன்றை கட்டி எழுப்பப் போகிறோம் என்று கூறி. தாம் போராடுவதாக பரப்புரை செய்து பல ஆண்களை இவர்கள் கவர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பெண்களை விருந்தாகப் படைத்து. கையில் ஆயுதங்களை கொடுத்து இவர்கள் சண்டையில் ஈடுபட வைக்கிறார்கள். தங்களிடம் வந்தால். ஜாலியாக இருக்கலாம் என்பது தான் இவர்கள் சொல்லும் சுலோகமாக உள்ளது. இவர்கள் ஒரு விடுதலை இயக்கமா ? விடுதலை இயக்கம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதனை , புலிகள் தமது கட்டுப் பாட்டின் மூலம் உணர்த்தினார்கள். அமெரிக்கா தொடக்கம் பல உலக நாடுகள், புலிகளை தீவிரவாத பட்டியலில் இட்டால் கூட. அவர்கள் ஒழுக்கம் பற்றி இன்றுவரை மெச்சியுள்ளார்கள். இது தமிழர்கள் பெருமைப்படும் விடையங்களில் ஒன்று தான்
Share:
Read More

தமிழனை போற்றும் லண்டன் வெள்ளைக்காரர்கள்

சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றிவரும் குணசேகரன் குமார் என்னும் மருத்துவரை ,பிரித்தானிய சன் பேப்பர் சிறந்த ஒரு மனிதராக கெளரவித்துள்ளது. பல உயிர்களை காத்த கடவுள் என அந்த நாளிதழ் அவரை பெருமைப்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள மருத்துவர்கள் தர வரிசையில். இவரது பெயரும் இடம்பிடித்துள்ள விடையம். அனைத்து தமிழர்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு முறை வேல்சில் நிறைமாத கர்பிணியாக இருந்த தாய் ஒருவர் காரில் செல்லும் போது பெரும் விபத்தில் சிக்கினார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை.அங்கே வேலையில் இருந்த குணசேகரன் உடனே அறுவை சிகிச்சை செய்து பிள்ளையை வெளியே எடுத்தார். பிறந்து சில நிமிடங்களே ஆன அச் சிசுவுக்கு, மார்பில் பிரச்சனை இருப்பதை சட்டென கண்டு பிடித்து உடனே அறுவை சிகிச்சை செய்ததோடு மட்டுமல்லாது. சுமார் 7 மணி நேர அறுவை சிகிசை செய்து தாயாரையும் காப்பாறியுள்ளார்.

வெறோனிக்கா ஜோன்ஸன் என்னும் இப் பெண் கூறுகையில். என் உயிரை எனக்கு திருப்பி தந்த நபர் குணசேகரன் என்றும். அவர் தலை சிறந்த ஒரு மருத்துவர் என்றும் தெரிவித்துள்ளார். நானும் எனது பிள்ளையும், எமது வாழ்க்கையையே அவருக்கு அர்பணித்தாலும். அவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த ஒரு பெருமிதமும் இன்றி, குணசேகரன் மிகவும் சாதாரணமாக காணப்படும் ஒரு மருத்துவர். அவர் பல முது கலைகளை கற்று, பிரித்தானியாவில் அதி உச்ச தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Share:
Read More

உணர்வாளர்களினால் தவறாக வழிநடத்தபட்ட புலிகள்

புலிகள் தோற்று போனது உணர்வாளர்களினால் அமபலமாகும் உண்மைகள்
Share:
Read More

உலக மொழிகளை தமிழில் இலகுவாக கற்க

அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும்  என ஆசை இருப்பது இயல்பு.  எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.  உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது .  மிகவும் இலகு உங்களுக்குரிய மொழியைத் தெரிவு செய்து

கற்கலாம்.  கற்ற மொழியைப்  பயிற்சிகள் செய்யலாம்.  அதேநேரம் நீங்கள் கற்ற மொழியைக் கதைத்துப் பார்க்க
Share:
Read More

தமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு!

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும்,ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியற் பரப்புரை இயக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகமெங்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. Yes to referendum என்ற பெயரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெருஞ்செயற் திட்டங்களில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டிருந்த இச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடாத்துவதற்கு பிரதமர் பணிமனையில் ஒருங்கிணைப்புச் செயலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில்இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்தும் ஜனநாயக வழிமுறையாகவே இப் பொதுவாக்கெடுப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற்தீர்வாகத் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுத்திட்டமுன்மொழிவுகள் தமிழீழ மக்களின்முன்வைக்கப்பட்டு, அவற்றினிடையே பொதுவாக்கெடுப்பின் மூலம் மக்கள் வெளிப்படுத்தும் ஜனநாயக முடிவுக்கு ஏற்ப அரசியற்தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை இவ் அரசியற்பரப்புரை இயக்கம் மேற்கொள்ளும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த குர்திஸ்தான், கத்தலோனியா பொதுமக்கள் வாக்கெடுப்புகள் நமக்கு ஒரு தெளிவான செய்தியினைத் தெரிவிக்கின்றன. விடுதலைக்கு அவாவும் மக்களே அதற்கான பொறிமுறையையும் கையிலெடுத்து தமது சுதந்திர வேட்கையினை முன்னோக்கித் தள்ளவேண்டும் என்பதே அச் செய்தியாகும்.

தமிழீழ மக்களும் பொதுவாக்கெடுப்பு என்ற பொறிமுறையினைத் தமது கையில் எடுத்தாக வேண்டும். பொதுவாக்கெடுப்பு நடாத்துவதற்கான ஒரு சூழல் கனியும்வரை ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் அழுத்தமாக வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

இவ் அரசியற்பரப்புரை வேலைத்திட்டத்துக்கான முன்னெடுப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ள போதும் இதனை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இணைந்தவகையில் மேற்கொள்வதற்கான அழைப்பையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இத் தருணத்தில் வெளியிடுகிறது.

இவ் விடயம் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகளுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேரடியான தொடர்புகளை மேற்கொள்ளும்.

இவ் அரசியல் பரப்புரை இயக்கத்தில் ஈழத்தாயகமும் தமிழகமும் இணைந்து கொள்ளுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையில் அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்துக்கு முரணானது அல்ல. இதனால் சட்டவரையறை என்ற அச்சம் தவிர்த்து ஈழத்தாயகத்தில் இப் பரப்புரை இயக்கத்தினை மேற்கொள்வது சாத்தியமானதே.

இத்தகைய ஒரு பொதுவாக்கெடுப்பினை நடாத்துவதின் நடைமுறைச்சாத்தியம் குறித்த கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதனையும் நாம் அறிவோம். இவ் விடயத்தில் எமது கருத்து இதுதான்.

ஈழத் தமிழ்மக்கள் ஒரு தேசம் என்ற தகுதியினை அனைத்துலகச்சட்டங்களின் அடிப்படையில் கொண்டுள்ளனர். இத் தகுதிக்கான அங்கீகாரத்தை நாம் அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றோம்.

இதனை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் இப் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கான அரசியற்பரப்புரை இயக்கம். உலக அரசியல் நீதியின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது. ஈழத் தமிழ் மக்களுக்கு வாய்ப்பான ஒரு அரசியற்சூழல் வரும்போது ஒரு பொதுசனவாக்கெடுப்பினை நடாத்துவதற்கான வாய்ப்பும் நமக்குக் கிடைக்கும். அதுவரை எமது சுதந்திரவேட்கையினை உலகுக்கு முரசறைந்து கொண்டிருப்பது அவசியமானதாகும்.

இப் பரப்புரை இயக்கத்துக்கான ஆதரவினை வழங்குமாறு உலகத்தமிழ் மக்களைக் கோருவதுடன் இப் பரப்புரை இயக்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:
Read More

பசிலால் இராணுவம் காட்டிக்கொடுப்பு சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

போரின் போதும் போருக்குப் பின்னரும் இராணுவத்துக்குள் உள்ள தனிப்பட்ட சிலரே குற்றங்களை இழைத்தனர் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ யாழ்ப்பாண த்தில் கூறியிருப்பது, தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதற்கான அரசியல் தந்திரம் என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த பசில் ராஜபக்ஷ படையினர் போர்க்குற்றங்க ளில் ஈடுபடவில்லை என்றும், ஆனால் சில தனிநபர்கள் குற்றங்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராணுவத் தளபதியும், தற் போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத் துவதற்காக பஷில் ராஜபக்ஷ முழு இராணு வத்தையும் காட்டிக் கொடுத்துள்ளார்.

ராஜபக்ஷக்களை சிறுபான்மை மக்கள் வெறுப்புடன் நிராகரித்தனர். தேர்தல் முடிவுகளில் இது தெளிவாக வெளிப்படுத்தப்ப ட்டது. இந்த நிலையை மாற்றி, பாசத்தை காட் டுவதற்காக, இராணுவத்தைப் பயன்படுத்தியு ள்ளார் பஷில் ராஜபக்ஷ.
நாங்களும் கூட தமிழ் மக்களின் இதய ங்களை வென்றிருக்கிறோம். ஆனால் நாங் கள் நியாயமான வழிமுறையைப் பயன்படுத்தினோம்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவைக் குற்றம்சாட்டி நான் வெளியிட்ட கருத்துக்கும், பஷில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது.

நான் ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றம்சாட்டவில்லை. யாரையும் பெயரைக் கூறாமல் குற்றம்சாட்டவில்லை.
ஒருவர் மீது தெளிவாக எனது குற்றச் சாட்டை சுமத்தியிருந்தேன். எழுந்தமான மாக தனிநபர்கள் என்று கூறவில்லை.

ஜெனரல் ஜயசூரியவுடன் இருந்த கோப்ரல் ஒருவரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. போர் முடிவுக்கு வந்து இர ண்டு வாரங்களின் பின்னரும் ஜெனரல் ஜய சூரிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தார் என்று அவர் எனக்குத் தகவல் வழங்கினார்.
ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டை நான் சுமத்திய போது, அதனைக் கடுமை யாக விமர்சித்த தனிநபர்கள், அரசியல்வாதி கள், பிக்குகள் ஏன் பஷில் ராஜபக்ஷவின் அறி க்கைக்குப் பின்னரும் மௌனமாக இருக்கின்றனர்.
என்னை விரோதியாக சுட்டிக்காட்டியவ ர்கள் மற்றும் போர் வீரர்களின் பாதுகாப்பி ற்காக பேசியவர்கள் இன்று அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் இப்போது எந்த கண்ணீரும் சிந்தவில்லை.

குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். யாராவது குற்றவாளிகள் என்று அறிந்தால், அவர்கள் நீதிக்கு முன்கொண்டு வரப்பட வேண்டும்.
தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடி க்கை எடுக்கப்படவில்லை என்றால், நாட்டுக்கு அவமானமே ஏற்படும்.

யாராவது ஒருவர் குற்றங்களைச் செய்த தற்கான ஆதாரங்களை மறைத்தால், அவ ர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive