நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு 
வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு
நீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும்
பின்வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு

பலவான்களை வெட்கப்படுத்தவே 
பெலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே (2)
ஞானவான்களைப் பைத்தியமாக்கவே
பைத்தியங்களை தேவன் தெரிந்துகொண்டாரே

நகையிலே பைத்தியம் புகையிலை பைத்தியம்
உடையிலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம் 
மண்ணாசை பைத்தியம் பெண்ணாசை பைத்தியம்
மயக்க மருந்து நீ எதற்கு பைத்தியம் 
சாராய பைத்தியம் பீர் ஜின்னு பைத்தியம்
ரம் விஸ்கி பைத்தியம் காப்பி டீ பைத்தியம்
பதவி ஆசை பைத்தியம் ஆளுக்காக பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்

தேவன் உன்னிலே உலக செல்வம் அழியுமே 
உயர்ந்த ஆடைகள் போட்டரித்து போகுமே 
உலக ஞானமே தேவன் பார்வையில் 
உதவும் பைத்தியம் என்று ஆகுமே 

சினிமாவிலே பைத்தியம் சூதாட்ட பைத்தியம்
பணத்திலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
கட்சியிலே பைத்தியம் வீண்பேச்சு பைத்தியம் 
குதிரை பந்தய பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்
ஆனந்தவிகடன் பைத்தியம் ராணி முத்து பைத்தியம்
பேசும் படம் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
சாவி குங்குமம் பைத்தியம் குமுதம் கல்கி பைத்தியம்
சினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்

கடவுள் பைத்தியம் என்று சொல்வது 
உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே 
சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும்
மீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும்

வெத்தலை பாக்கு பைத்தியம் பூ வைக்கும் பைத்தியம்
தூக்கத்திலே பைத்தியம்
உணவிலே பைத்தியம் ஊர்சுத்தும் பைத்தியம்
சிற்றின்ப பைத்தியம்
லிப்ஸ்டிக் பைத்தியம் க்யூடெக்ஸ் பைத்தியம்
ஐடெக்ஸ் பைத்தியம்
இட்டுகட்டு கிரிக்கெட்டு பைத்தியம் மேநாட்டு பைத்தியம் 

தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காக 
வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவே 
ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேரிடினும் 
என் சாவும் இயேசுவுக்கே
Share:
Read More

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு சிறையில் ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு
 சிறையில் இருந்த ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு மாற்றிய விதம் 
Share:
Read More

ஐரோப்பா

ஏசாயா 10 
10 தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது. அந்தச் சட்ட வல்லுநனர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில்லை. அவர்கள் ஏழைகளின் உரிமைகளை பறித்துக்கொண்டனர். விதவைகள் மற்றும் அநாதைகளிடமிருந்து திருடுமாறு அவர்கள் அனுமதித்தனர்.
சட்டமியற்றுபவர்களே, நீங்கள செய்தவற்றுக்கெல்லாம் விளக்கம் தரவேண்டும். அப்போது என்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தூர நாட்டிலிருந்து அழிவு வரும். உதவிக்கு நீங்கள் எங்கே ஓடுவீர்கள்? உங்கள் பணமும் செல்வமும் உங்களுக்கு உதவி செய்யாது. நீங்கள் சிறைக் கைதியைப்போன்று பணிந்து வாழவேண்டும். நீங்கள் மரித்துப்போனவனைப்போன்று கீழே விழ வேண்டும். ஆனாலும் அது உங்களுக்கு உதவாது! தேவன் இன்னும் கோபமாக இருக்கிறார். தேவன் இன்னும் உங்களைத் தண்டிக்கத் தயாராக இருக்கிறார்.
Share:
Read More

காதலின் பெயரால்பரிசுத்த குலைச்சல் உண்டாகும்


Share:
Read More

கிறிஸ்தவர்கள் யோகா, தியானம் செய்யலாமா ?

 
அருட்தந்தை அவர்களே கிறிஸ்தவர்கள் யோகா, தியானம் செய்யலாமா ?


பதில்
அன்பரே !
  • யோகா என்பதும், தியானம் என்பதும் உடல், மன கட்டுப்பாட்டிற்கான ஒரு பயிற்சியே. இதில் சமய சாயம் பூச அவசியமில்லை.
  • சில சமய ஆர்வலர்கள், இந்து முறைப்படி யோகா, தியானம் என்றும், கிறிஸ்தவ முறைப்படி யோகா, தியானம் என்றும் பயிற்சிகளை அளிக்கிறார்கள்.
  • இதை எந்த சமய கண்ணோட்டத்தோடும் பார்க்க வேண்டாம்.
  • சரீரத்தை கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, தியான பயிற்சிகளை நீங்கள் தாராளமாக செய்யலாம்.
  • இதில் பெரும்பாலும் இடறல் வராது.
  • நன்றி http://www.catholicpentecostmission.in/QuestionAnswer.html
Share:
Read More

என்றென்றும் நம்பிக்கைக்குரியவர் நம் இயேசு

என்றென்றும் நம்பிக்கைக்குரியவர் நம் இயேசு
என்றென்றும் நல்லவர் நம்  இயேசு
என்றென்றும் வல்லவர் நம்  இயேசு
என்றென்றும் நன்மை செய்பவர்  நம் இயேசு
என்றென்றும் போதுமானவர்  நம் இயேசு
என்றென்றும் மாறாதவர் நம் இயேசு
என்றென்றும் காப்பவர் நம் இயேசு
என்றென்றும் ராஜாதி ராஜா நம் இயேசு
என்றென்றும்  கர்த்தாதி கத்தார் நம் இயேசு
என்றென்றும்  என்னுடன் இருக்கிறார் நம் இயேசு
என்றென்றும் நமக்குள் வாசம் செய்கிறார் நம் இயேசு 
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive