விஜய்க்கு அடிபணிந்த பா.ஜ.க


அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த ‘மெர்சல்’ பட விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டிருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு அது இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை கிண்டல் செய்யும் காட்சிகளுக்கு பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவற்றை நீக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார்.
அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் ‘மெர்சல்’ பட காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பா.ஜனதா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததால் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும் பா.ஜனதாவுக்கு எதிராகவும் அரசியல் கட்சிகள் களம் இறங்கின.
தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ் கட்சிகள், நாம் தமிழர் கட்சி, ச.ம.க. என அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளும் தமிழ் திரை உலகமும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்தன. எந்த காட்சியையும் நீக்க கூடாது என்றும் குரல் கொடுத்தனர்.
இதற்கிடையே இதுவரை சினிமா பிரச்சினைகளில் தலையிடாத காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கபில் சிபில், சசிதரூர் ஆகியோரும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர்.
இதனால் ‘மெர்சல்’ படத்தில் வரும் ஜி.எஸ்.டி. காட்சிகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய அளவில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு கிடைத்தது.
‘மெர்சல்’ பட வசனம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்யாதீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி கபில்சிபல் தனது டுவிட்டரில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா பற்றி ‘மெர்சல்’ படத்தில் கருத்துக்களை முன்வைக்க விஜய்க்கு உரிமை உண்டு. பேச்சு சுதந்திரத்துக்கு பா.ஜனதா புதிய வரையறை கொடுக்கிறது. எது சரி, எது தவறு என்பதை பா.ஜனதா தீர்மானிக்க முயற்சிக்கிறது என்று சாடியுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் தனது டுவிட்டரில், தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “காங்கிரஸ் அதை பேணி காப்பதில் உறுதியாக உள்ளது, அதிகாரத்தில்  இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுதந்திரம் தான் நமது பாதுகாப்பு” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரசை சேர்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி.க்கு எதிரான காட்சிகளை நீக்கச் சொல்வது அநீதியானது என்று கூறியுள்ளார்.
‘மெர்சல்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ராமசாமி அறிக்கை வெளியிட்டார். அதில், ‘மெர்சல்’ பட சர்ச்சை வேதனை அளிக்கிறது. இது யாருக்கும் எதிரானது அல்ல என்று பா.ஜனதா முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலமும் விளக்கம் அளித்தோம், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இனி அவர்கள் பார்வையில் எதிர்ப்பு நியாயமாக இருந்தாலும் அதற்காக சர்ச்சை காட்சிகளை நீக்க தயாராகவே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
‘மெர்சல்’ பட விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவையற்ற எதிர்ப்பை உருவாக்கியிருப்பதாக பா.ஜனதா மேலிடம் கருதுகிறது. காட்சிகளை நீக்கினால் மிரட்டல் காரணமாக நீக்கப்பட்டதாகி விடும். எனவே காட்சிகள் நீக்கம் இருக்காது என்றே தெரிய வருகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் ‘மெர்சல்’ பட தயாரிப்பு நிர்வாகி ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் ‘மெர்சல்’ படத்தில் எந்த காட்சியும் நீக்கமோ அல்லது அழிப்போ கிடையாது” என்று தெளிவுபடுத்தி உள்ளார்.
Share:
Read More

கடற்புலிகளின் தளபதி ஒருவர் உயிருடன்

கடற்புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் சூசைக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவர்களில் சீலன் முக்கியமானவர். அவர் கடற்புலிகளின் பிரதித் தளபதியாக இருந்துள்ளார்.
கடற்படைக்கு எதிரான பல தாக்குதல்களின் போது தலைமை வகித்துள்ள சீலன், கடற்படையின் வள்ளங்கள் பலவற்றை அதிரடித்தாக்குதல் மூலம் மூழ்கடிக்கவும் செய்துள்ளார்.
வன்னி யுத்தத்தின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சீலனும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
ஏனையவர்களைப் போன்று அவரைப்பற்றிய தகவல்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. கடற்படையினரால் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் சீலன் எனப்படும் லோகேஸ்வரன் உயிருடன் இருக்கும் தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள பிரதியமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு சீலன் அண்மையில் நேரில் சென்று கலந்துரையாடல் மேற்கொண்டிருப்பது குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:
Read More

சீமானின் கருத்துக்கள் மெர்சல் படத்தில்

சீமானின் கருத்துக்கள் மெர்சல் படத்தில்

Share:
Read More

பெயர் மாற்றும் சாமியார்

தமிழ் நாட்டில் பெயர் மாற்றும் மிக பிரபல சாமியார் ,பிரபல தேச பிதா,தூய இந்து h raja ji he
Share:
Read More

பெரியாரின் பொய்கள் பித்தலாட்டங்கள்


பெரியாரின் பொய்கள் பித்தலாட்டங்கள்
Share:
Read More

கேவலமான கதா பத்திரங்களினால் உருவானது இந்து மதம்


கேவலமான கதா பத்திரங்களினால் உருவானது இந்து மதம்

Share:
Read More

வடக்கு-கிழக்கு சமஷ்டி அடிப்படையில் மதச்சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும்


இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தாம் நிராகரிப்பதாக வடமாகான முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை நிராகரிக்கின்றீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது- நீண்ட காலமாக இலங்கையின் நிலப்பரப்பு யாழ்ப்பாண இராஜ்ஜியம், கண்டிய இராஜ்ஜியம், உருகுணு இராஜ்ஜியம் மற்றும் கரையோர இராஜ்ஜியம் என்று பல இராஜ்ஜியங்களாக ஆளப்பட்டுவந்தது. நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் ஆங்கிலேயர் 1833ம் ஆண்டு சகல இராஜ்ஜியங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முழு இலங்கைக்கென ஒரு தனிநிர்வாக அலகை உண்டாக்கினார்கள். இதனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருந்த மக்கள் முழு இலங்கையிலும் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டார்கள்இப்பொழுதும் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர். முழு இலங்கையையும் சுதந்திரத்தின் போது ஆங்கிலேயர் இலங்கையரிடம் கையளித்துவிட்டுச் சென்றனர். சுதந்திரத்தின் போது இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை ஏற்றுக்கொண்ட எம் அரசியல் வாதிகள் அதிகாரம் கிடைத்த உடனேயே தாம் இலங்கையர் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டனர். சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், மலேயர் என தம்மைப் பிரித்துப்பார்க்கவும் சிந்திக்கவும் தொடங்கிவிட்டார்கள். பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அவர்கள் சட்டங்களைப் பெரும்பான்மையினருக்கு ஏற்ற விதத்திலும் சிறுபான்மையினரைப் புறக்கணிக்கும் விதத்திலும் பாத்தனர். அதனால் 1949ம் ஆண்டில் மலையகத் தமிழர்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு கொண்டு வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டம் தமிழ் அரச அலுவலர்களின் உரித்துக்களைப் பறித்தெடுத்தது. தரப்படுத்தல் எம் மாணவர்களின் உயர் கல்வியில் கை வைத்தது. அரச காணிக்குடி யேற்றங்கள் தமிழர் பாரம் பரியமாக வாழ்ந்த இடங்களை பிற இடங்களில் இருந்து கொண்டு வந்த பெரும்பான்மையினர் பறித்தெடுத்து குடியிருக்க உதவின. 1970ம் ஆண்டளவில் தான் திருகோணமலையைச் சுற்றி சிங்களக் கிராமங்கள் உருவாகத் தொடங்கின. பொலிஸார் மேலான அதிகாரம் மத்தியின் கைவசம் இருந்ததால் வடகிழக்கு மாகாணங்களில் சிங்களப் பொலிஸாரின் ஆதிக்கம் கூடியது. இராணுவத்தினரும் அழைக்கப்பட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது குறிப்பிட்ட சில பௌத்த வணக்கஸ்தலங்களை விட வேறெங்கும் பௌத்த கோயில்களோ, விகாரைகளோ இருக்கவில்லை. இப்பொழுது இராணுவ அனுசரணையுடன் பௌத்த வணக்கஸ்தலங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டு வருகின்றன. பௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் அவை எழும்புகின்றன. போருக்குப் பின்னர் தான், இது ஒரு ‘சிங்கள பௌத்த நாடு’ என்ற குரல் ஆவேசமாக ஒலித்து வருகின்றது. சரித்திரம் பிழையாக எடுத்துரைக்கப்பட்டு இந்த நாடு ஒரு சிங்கள பௌத்தநாடு என்ற பொய்யான, பிழையான, தவறான கருத்தை முன்வைத்து வருகின்றார்கள். வடக்கில் எந்தக் காலத்திலுமே சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழவில்லை. தமிழ் பௌத்தர்கள் வடகிழக்கில் சிலநூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். இன்று இருக்கும் பௌத்த எச்சங்கள் அவர்களால் விடப்பட்டவையே. நாயன்மார்களின் பக்திப் பிரவாகம் மக்களை ஈர்க்கத் தொடங்கிய போது தமிழ் பௌத்தர்கள் பௌத்தத்தைக் கைவிட்டுவிட்டு முன் போல் சைவர்கள் ஆனார்கள். ஆகவே வடகிழக்கு பௌத்தத்தை வேண்டாம் என்று கைவிட்ட ஒருபிரதேசம். அங்குமீளவும் பௌத்தத்தை அதுவும் அரச உதவியுடன் திணிக்கப் பார்ப்பது வடகிழக்கு மக்களின் மனிதஉரிமைகளைப் பாதிப்பதானது. வடகிழக்கு மக்கள் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் அல்லாதவர்கள். இப்போதிருக்கும் பௌத்தர்கள் கூட அரச உள்ளீட்டால் அண்மைக் காலங்களில் உள்ளேற்கப்பட்டவர்கள். ஆகவே இலங்கையை பௌத்தநாடென்றோ சிங்களநாடென்றோ கூறுவதை நான் வலுவாக நிராகரிக்கின்றேன். இப்பொழுதும் எப்பொழுதும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்ப்பேசும் மக்களே பெரும்பான்மையினராக இருந்துவந்துள்ளனர். தென்னிந்தியாவில் பௌத்தம் வளர்ச்சியடைந்த காலத்தில் இலங்கையின் வடகிழக்கிலும் பௌத்தம் வளர்ச்சி கண்டது.
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive